
பாகிஸ்தானுக்கு டீசல் ஏற்றுமதி செய்வது குறித்து இந்தியா-பாகிஸ்தானிடையே இரு நாட்டு அமைச்சர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.
பாகிஸ்தானில் தற்போது கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது. முக்கியமாக டீசல் பற்றாக்குறையினால் பாகிஸ்தான் கடும் அவதிக்குள்ளாகி வருகிறது.
கடந்த 2005ம் ஆண்டிலிருந்து இந்தியா-பாகிஸ்தானிடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியா தனது எண்ணெய் தேவையினை 80 சதவீதம் இறக்குமதி செய்வதன் மூலம் உபயோகித்து வருகிறது. எனினும் இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
இவற்றில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பானிபட் அருகே ஒன்றும், பஹடின்டா அருகே ஒன்றும் உள்ளன. இங்கிருந்து தான் டீசல் ஏற்றுமதி செய்யப்படலாம் என தெரிகிறது.
மேலும் பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தினை பாகி்ஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு வேண்டிய எரிபொருளினை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
அதன்படி தற்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டினை போக்க, பாகிஸ்தானுக்கு டீசல் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து இருநாட்டு பெட்ரோலியத்துறை அமைச்சர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெயபால்ரெட்டி, பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஆசிம் ஹூசைன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.














]
] [



